கடந்த 2020 -2021 ஆம் நிதி ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் நன்கொடையாக ரூ.258.49 கோடியை பெற்றுள்ளன. அதிலிருந்து 82 சதவீதம் அதாவது ரூ.212.05 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது. தேர்தல் அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்புகள் பெரு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடைகளை பெற்று அதனை அரசியல் கட்சிகளுக்கு வழங்கி வருகின்றன. அரசியல் கட்சிகளின் தேர்தல் வெளிப்படைத்தன்மை உருவாக்கும் நோக்கத்தில் இந்த அறக்கட்டளை செயல்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தேர்தல் அறக்கட்டளைகள் பெற்ற நன்கொடை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஜனநாயக சீர்திருத்த சங்கம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் பாஜகவுக்கு 212 கோடியும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 27 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, அதிமுக, ஆர் ஜே டி, ஆம் ஆத்மி, எல்ஜேபி, சிபிஎம்,சி பி ஆகிய கட்சிகளுக்கு 19.38 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.