பிரிட்டனில் 7 நபர்களில் ஒருவருக்கு 12 வாரத்திற்கு கொரோனா அறிகுறிகள் நீடிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த வருடம் மார்ச் மாதம் வரை சுமார் 1.1 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சுமார் 13.7 சதவீதம் நபர்களுக்கு குறைந்த பட்சம் 12 வாரங்களுக்கு கொரோனா அறிகுறிகள் நீடித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தேசிய புள்ளிவிவர அலுவலகம் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த ஆய்வானது பாதிப்படைந்தோரின் சுய-அறிக்கைக்கான அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இது Long Covid என்று கூறப்படுகிறது. அதாவது தசைவலி, கவனம் செலுத்துவதில் சிரமப்படுதல், உடல் சோர்வு, சுவை உணர்வு மற்றும் வாசனை திறன் இழப்பு போன்ற 13 அறிகுறிகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
இது போன்ற நீண்ட நாள் அறிகுறிகளை ஆண்களில் 12.7 சதவீதம் பேருக்கும் பெண்களில் 14.7 சதவீதமும் பேருக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 35-லிருந்து 40 வயதுக்கு உட்பட்ட நபர்கள் சுமார் 25.6 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஐந்து வாரங்களுக்கு அறிகுறிகளை கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், இந்த Long Covid தற்போதுவரை சரியாக புரிந்துகொள்ள முடியாததாகவும் வளர்ந்துகொண்டே வரும் நிகழ்வாகவும் உள்ளது என்று கூறியுள்ளனர்.