திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை 7நாட்களில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த 47 ரவுடிகளை 7 நாட்களில் கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ” காஞ்சிபுரம் சரக காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் 47 பேரை கடந்த 7 நாட்களில் கைது செய்து அவர்கள் அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அனைவரையும் நீதிமன்ற காவல் மற்றும் ஆர்டிஓ ஆகியோரிடம் முன்னிலை படுத்துவதற்கு ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.