சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு 1,000ஐ கடந்துள்ளதால் சென்னை வாசிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில்,மேலும் 5,890 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,26,245 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,187 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,13,058 ல் இருந்து 1,14,260 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், 2,67,015 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.. தமிழகத்தில் தற்போது வரை 53,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 5,514 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த 7 நாட்களாக 1000த்துக்கு கீழ் பாதிப்பு பதிவாகியுள்ள நிலையில் இன்று மீண்டும் 1000ஐ கடந்து பதிவாகி இருப்பதால் சென்னை வாசிகள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் தற்போது கொரோனாவுக்கு 11,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.