Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

7 நாள் தினமும் காலையில் எழுந்தவுடனே… ஒரு டம்ளர் வெந்நீர் குடிங்க… இந்த அதிசயம் எல்லாம் உங்களுக்கு நடக்கும்..!!

தினமும் காலையில் எழுந்த உடன் வெந்நீரை நாம் பருகுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

காலையில் தண்ணீரை அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெந்நீரில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. குளிர்காலம் ஆனாலும் சரி, கோடை காலமானாலும் ஆனாலும் சரி தினமும் ஒரு டம்ளர் வெந்நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கின்றனர்.வெந்நீர் அருந்துவதால் நம் உடல் வெப்பநிலை உயர்கிறது. அது உடனடியாக வியர்வையாக மாறி உடம்பை வெளியேறுகிறது.

இதனால் உடலிலுள்ள நச்சுத் தன்மைகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி மேலும் முடிகள் வளர வழி வகுக்கின்றது. அடிக்கடி காபி, டீ குடிப்பவர்கள் அதற்கு மாறாக சுடுதண்ணீரில் சுக்கு கலந்து குடிப்பது மிகவும் சிறந்தது. இதன் மூலம் வாயுத்தொல்லையிலிருந்து விடுபடலாம். அதிக அளவு உணவு எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்டால் சில நேரங்களில் நெஞ்ச கரிக்க தொடங்கும். அப்பொழுதும் ஒரு டம்ளர் வெந்நீர் பருகினால் நெஞ்செரிச்சல் கொஞ்சம் நேரத்தில் போய்விடும்.

உணவு செரித்து விடும். தினமும் காலை எழுந்தவுடன் வெந்நீர் பருகினால் மலச்சிக்கல் தீரும். இரவு தூங்குவதற்கு முன் பருகினால் புளித்த ஏப்பம், வாயு பிடிப்பு ஆகியவை நீங்கிவிடும். வெந்நீர் பருகுவதால் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் மேம்படும். வெந்நீர் அருந்துவதன் மூலம் உடலில் நச்சுக்கள் வெளியேறுவதால் வயதின் காரணமாக ஏற்படும் முதிர்ச்சி தள்ளிப் போடப்படும். உடல் எடையை குறைக்க நினைப்போர் தினமும் உணவு உண்பதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு டம்ளர் வெந்நீரை குடித்து வர நாளடைவில் எடை குறையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Categories

Tech |