சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்குகொரோனா பாதிப்பு இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட 3,370 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இதில், 60 பேரில் 7 பயிற்சி டாக்டர்கள், நர்சிங் மாணவர்கள், ஒரு முதுகலைப் படிப்பு மாணவர், ஒரு துப்புரவு பணியாளர் உள்ளிட்ட 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி தென்பட்டது. இதையடுத்து இந்த 42 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு புனே மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.