பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தியுள்ளனர். வெடிகுண்டு தடுப்பு நிபுணர்களுடன் சென்று சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சோதனை நடத்தினோம்.
ஆனால் இதுவரை நடந்த சோதனையில் வெடிபொருள் எதுவும் கிடைக்கவில்லை இந்த மிரட்டல் பொய்யாக இருக்கலாம் என சந்தேகப்படுகிக்கிறோம். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என பெங்களூர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த் கூறியுள்ளார்.