Categories
உலக செய்திகள்

7 பெண்களை கத்தியால் தாக்கிய இளைஞர்.. ஒரு பெண் உயிரிழப்பு.. காரணம் என்ன..?

கனடாவில் கறுப்பின இளைஞர் ஒருவர் தொடர்ந்து 7 பெண்களை கத்தியால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவிலுள்ள வட வான்கூவர் இருக்கும் ஒரு மாலில் Susanne Till என்ற பெண் நடன வகுப்பில் தன் மகளை அனுப்பி விட்டு வெளியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கருப்பின இளைஞர் திடீரென்று Susanne வை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதனைக்கண்ட Sheloah Klausen என்ற ஆசிரியை தன் குழந்தைகளை பத்திரமான இடத்தில் அமர சொல்லிவிட்டு ஓடிச்சென்று  தன் குடையால் அந்த இளைஞரை தாக்கியுள்ளார். அதன்பின்பு அந்த இளைஞர் திடீரென்று திரும்பி அந்த ஆசிரியையின் கையில் கத்தியால் கீறியதோடு அவரது தலையின் பின் பகுதியிலும் தாக்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து Jini Segulam Singh-Henderson என்ற பெண் தன் மகளும் இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் ஒரு இளம் பெண் முகம் மற்றும் கைகளில் அந்த நபர் குத்தியுள்ளார்.

அதாவது சுமார் ஏழு பெண்களை அந்த நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஒரு பெண் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்தப் பெண் குறித்த தகவல்கள் தெரியவில்லை. மேலும் இந்த தாக்குதல்களை நடத்திய நபர் Yannick Bandaogo என்ற 28 வயது இளைஞர் என்பது தெரியவந்துள்ளது.

எனினும் எதற்காக அவர் பெண்களை மட்டும் குறி வைத்து கத்தியால் தாக்கினார் என்பது தெரியவில்லை. எனவே காவல்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |