Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை – அரசின் தீர்மானம் பூஜ்யம் தான் ” மத்திய அரசு வாதம் …!!

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் பூஜ்யம் தான் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் சட்டவிரோதமான காவலில் வைத்துள்ளதாக நளினி தொடர்ந்த ஆள்கொணர்வு வழக்கு இன்று விசரணைக்கு வந்தது. அதில் , அமைச்சரவை ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். ஆளுநர் தன்னிச்சயாக செயல்பட முடியாது.  தமிழக அரசை ஆளுநர் நடத்துகின்றாரா அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகின்றதா ? நளினி தரப்பில் வாதங்கள் முவைக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் , ஆளுநரின் அதிகாரத்தில் கேள்வி எழுப்ப முடியாது . மாநில அரசு நினைத்தாலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எதுவும் செய்ய இயலாது. 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்தது பற்றி ஆளுநருக்கு தெரியப்படுத்தி விட்டோம். தீர்மானம் மீது ஆளுநர் உத்தரவு  பிறப்பிக்காதவரை சட்டவிரோத காவல் என கருத முடியாது.

மத்திய விசாரணை அமைப்பின் வழக்கில் மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்கும்.7 பேர் விடுதலை குறித்து நாங்கள் ஒப்புக்கொள்ளும் வரை தமிழக அரசின் தீர்மானம் பூஜ்யம் தான் சட்டவிரோத காவலில் இல்லை என்பதால் நளினியின் ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து நீதிமன்றம்.

Categories

Tech |