Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை….. ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம்குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

இந்த கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரறிவாளன் மட்டுமல்லாமல் 7 பேரின் விடுதலை குறித்த ஆவணங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்தனர்.  தொடர்ந்து எந்த தேதியில் ஆவணங்கள் அனுப்பப்பட்டது  என தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார், மேலும் விசாரணையை ஏப்ரல் 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளதால் கவர்னருக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது. இதனிடையே மூன்று நாள் பயணமாக தமிழக கவர்னர் இன்று டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |