முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 9.9.2018 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் இந்த தீர்மானம் தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு கவர்னர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே தமிழக கவர்னருக்கு எதிராக நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் கவர்னர் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது நீதிமன்றத்தை அவமதிப்பது மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் நளினி வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கின் விசாரணையை தசரா பண்டிகை விடுமுறைக்கு பின்னும் ஒத்திவைத்துள்ளார்.