Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்காதீங்க”… உங்களுக்கு இந்த பிரச்சினை எல்லாம் வரும்… எச்சரிக்கை…!!

ஒரு மனிதனுக்கு தண்ணீர் உணவு போன்று தூக்கமும் அத்தியாவசியமான ஒன்று. அதில் ஒன்று குறையும் போது கூட ஆபத்து ஏற்படும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.

தூக்கமின்மையின் காரணமாக தான் பல நோய்கள் நம் உடலுக்கு வருகிறது என்று ஆய்வு கூறுகிறது. ஒருவருக்கு உடல் பருமன் அதிகமாக இருந்தால் அதைக் குறைக்க உணவு, உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துகிறோம். அதைதவிர உறக்கத்தை மறந்து விடுகிறோம். ஒரு மனிதன் 7 முதல் 8 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். உடல் எடை மற்றும் தூக்கத்திற்கு என்ன தொடர்பு என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள்.

அப்படி நடத்தப்பட்ட ஆய்வில் தூக்கம் நேரம் குறைந்தாலோ அல்லது 7 முதல் 8 மணி நேரம் உறக்கம் இல்லாமல் போனாலோ பசியை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும். உடல் பருமன் முதல் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் என பல பிரச்சனைகள் ஏற்படும். தூக்கமில்லாமல் இருந்தால் நீரழிவு நோய் ஏற்படும்.

வெறும் 15 நிமிடங்கள் கூட குறைவாக தூங்கினால் உடல் எடை அதிகரிக்கும் . லெப்டின் பசியை அடக்குகிறது மற்றும் எடையை குறைக்க உதவும். ஆனால் புரோஃபிலிங் பசியை அதிகரிக்கும் உடல் எடையை அதிகரிக்கும். மேலும் ஒரு ஆய்வில் தங்கள் அன்றாட இரவு தூக்கத்தை 7 மணியிலிருந்து 5 மணி நேரமாக குறைத்தால் இதய நோயும், பிற குறைபாடுகளும் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |