சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.
அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் தற்போது சில வாரங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,712 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைந்த எண்ணிக்கையாகும். இங்கிலாந்தில் கொரோனாவில் இரண்டாம் அலை தாக்கக்கூடும் எனவும், மக்கள் கொரோனா உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.