புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகை தந்ததால் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி மதகடிப்பட்டு சந்தை வாரம்தோறும் செவ்வாய் கிழமை மட்டும் செயல்படும் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த சந்தை 7 மாதங்களுக்கு பின் இன்று திறக்கப்பட்டது. சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர் மழையால் தந்தை முழுவதும் மழைநீர் தேங்கி சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் வியாபாரிகள் சாலை ஓரத்தில் கடை அமைத்து பொருட்களை விற்பதாகவும் எனவே மழை நீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் சந்தையை சீரமைத்து தர வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.