Categories
தேசிய செய்திகள்

7 மாதத்தில் ரூ.30,000 கோடி கொள்ளை…. மத்திய அரசு மீது நானா படேலே குற்றசாட்டு….!!

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படொலே மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளை அடித்து வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி முலம் பலவீனப்படுத்தி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய அரசு ஜிஎஸ்டி தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்திவைத்து மத்திய அரசிற்கு முதல் அடி கொடுத்தது. இதனால் மத்திய அரசு மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்காக எரிபொருள் மீது செஸ் வரி விதித்ததுள்ளது.

இதன் மூலம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரைம ட்டுமே ரூ.30,000 கோடி வரை மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்க பல்வேறு சட்ட வழிமுறைகளை பயன்படுத்தியுள்ளது. இந்த செஸ் வரி இல்லை என்றால் மராட்டிய அரசின் கருவூலத்திற்கு அந்த பணம் சேர்க்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து மாநிலத்தில் எரிபொருள் மீதான விலையை குறைப்பதற்கான வழிமுறை ஆராய வேண்டும் என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு ஏற்கனவே மதிப்பு கூட்டு வரியை குறைத்துள்ளது. முதல்வர் அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த வருவதால் சில நாட்கள் காத்திருந்து விரைவில் அவரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |