தென்னிந்தியாவில் 5 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.இது நவம்பர் 9ஆம் தேதி மற்றொரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்த அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும். மேலும் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Categories