நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களை அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் பேருந்துகளும் இன்று காலை முதல் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வந்தன. செங்கல்பட்டில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. மற்ற அரசு பேருந்துகள் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் பிற்பகல் 1-மணியிலிருந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, சீர்காழி, வேதாரண்யம், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் அனைத்தும் பேருந்து பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டன.
தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை. மறு உத்தரவு வரும் வரை பேருந்துகள் இயங்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையில் குறைந்தபட்சம் இரு தினங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.