Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை? – வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக  புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரசு பேருந்துகள் சேவை இந்த 7 மாவட்டக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து சேவையும் நிறுத்தப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |