Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏழு மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை பேருந்து சேவை மீண்டும் இயக்கப்படாது என்றும் அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |