தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்து சென்றது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், இன்று தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.