Categories
தேசிய செய்திகள்

அடடே..! “7 லட்சம் வரை இன்சூரன்ஸ்…!!” இப்படியும் ஒரு சூப்பர் திட்டம்…!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இன்சூரன்ஸ் திட்டமும் உள்ளது. இதுபற்றி பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு அறிந்ததில்லை. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு பிரீமியம் எதுவும் செலுத்த தேவையில்லை. காப்பீட்டு தொகையாக பயனாளிக்கு ரூ. 7 லட்சம் வரை கிடைக்கும். இத்திட்டம் தொழிலாளர் டெபாசிட் இணைப்பு காப்பீட்டு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தும் கணக்கு தாரர்களில் தகுதியுடையவர்களுக்கு ரூ.6 லட்சம் வரை இன்ஷூரன்ஸ் கிடைக்கும்.

தற்போது இது ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஃப் பெரும் நபர் தனது ஓய்வு காலத்துக்கு முன்னரே உயிரிழந்துவிட்டால் அவர் நாமினியாக குறிப்பிட்டுள்ள நபருக்கு இந்தத் தொகை கிடைக்கும். இதற்கு பயனாளி ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்த வேண்டாம். இதற்கு பயனாளி ஒரு வருடமாக தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |