மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அதாவது அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல தகவல் வெளியாகியுள்ளது. உங்களது காத்திருப்பு விரைவில் முடிவடைய இருக்கிறது. நவராத்திரியின்போது ஊழியர்களுக்கு அதிகரித்த அகவிலைப்படி பரிசாக கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அகவிலைப்படி குறித்த முறையான அறிவிப்பு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று அதாவது நவராத்திரியின் 3வது நாள் வெளியிடப்படக்கூடும். இதையடுத்து அக்டோபர் 1 முதல் ஊழியர்களின் DA 38 சதவீதம் ஆக அதிகரிக்கும். இதனுடன் சென்ற 2 மாத நிலுவைத்தொகையும், அக்டோபரில் கிடைக்கும்.
இந்த முறை அரசு அகவிலைப் படியை 4 சதவீதம் அதிகரித்து அறிவிப்பை வெளியிடக்கூடும். அதன்பின் ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்திலிருந்து 38 சதவீதம் ஆக உயரும். ஊழியர்களுக்கு செப்டம்பர்மாத சம்பளத்தில் அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட DA அமலுக்கு வந்தால், ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள 2 மாதப் பணம் நிலுவைத்தொகையாகப் பெறப்படும். 7-வது ஊதியக்குழுவின்படி, ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூபாய்.31550 ஆக இருந்து, அகவிலைபப்டி 38 ஆக உயர்ந்தால் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்
உங்களது சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்
# அடிப்படை சம்பளம் – ரூபாய் 31550
# அகவிலைப்படி 38 %- ரூபாய் 11989
# தற்போது உள்ள டிஏ – 34% – ரூபாய் 10727
# அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் – 4 %
# மாதசம்பள உயர்வு – ரூபாய்.1262
# ஆண்டு ஊதியஉயர்வு – ரூபாய்.15144
18000 அடிப்படை சம்பளத்தில் எவ்வளவு அதிகரிப்பு?
இது தவிர்த்து உங்களது அடிப்படை சம்பளம் ரூபாய்.18000 எனில், டிஏவில் மொத்தம் ரூபாய் 6840 அதிகரிக்கும். அதன்படி மாதாந்திர அகவிலைப்படி பற்றி பேசினால் உங்களது சம்பளம் ரூபாய்.720 அதிகரிக்கும்.