ஜூலை முதல் அமலுக்கு வர இருக்கின்ற அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பிற்காக 65 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கின்றார்கள். இதன் அறிவிப்பு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி அன்று அரசு நான்கு சதவீத உயர்வு பற்றி அறிவிக்க கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கிறது. ஆனால் டி ஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ஏழாவது ஊதிய குழுவின் படி பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது. செப்டம்பர் 20ஆம் தேதி பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பானையில் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை விதிகளை மாற்ற முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. பதவி உயர்வுக்கு தேவையான மாற்றங்களில் பொருத்தமான திட்டங்கள் செய்யப்பட்டு ஆட்சேர்ப்பு விதிகள் சேவை விதிகளில் இணைக்கப்படலாம் எனவும் Dopt மூலம் கூறப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான அனைத்து அமைச்சகங்களும் துறைகளும் உரிய நடைமுறையை பின்பற்றி ஆட்சி சிறப்பு விதிகளில் தேவையான மாற்றங்களை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. திருத்தப்பட்ட விதிகளின்படி லெவல் 1 மற்றும் லெவல் 2க்கு மூன்று வருடங்கள் பணி புரிவது அவசியமாகும். இதனை அடுத்து 116 முதல் 11 வரை 12 வருடங்களுக்கான சேவை அவசியம் இருப்பினும் லெவல் 7 மற்றும் லெவல் 8க்கு 2 வருட சேவை மட்டுமே தேவைப்படுகிறது.
மாற்றத்திற்கு பின் புதிய சேவை இந்த நிலையில் ஏழாவது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மார்ச் 2022 இல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்போது அரசாங்கம் அகவிலைப்படையை மூன்று சதவிகிதம் அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்தது. இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு மூன்று மாத நிலுவைத் தொகை வழங்கப்பட்டது. மேலும் ஜூலை மாதம் முதல் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது. இந்த முறை நான்கு சதவீதம் ஊதிய உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.