Categories
அரசியல்

7-வது படிக்கும் போதே…. என் அப்பா Benz கார் வாங்கி கொடுத்தார்….. கே.சி வீரமணி குமுறல்…!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் க. சி வீரமணிக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தியதில் கட்டுக்கட்டாக பணம், சொகுசு கார்கள், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.சி வீரமணி, “என் வீட்டில் கட்டுகட்டாக பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக கூறியது பொய்யான தகவல். கட்டடம் கட்டுவதற்காக என் வீட்டில் வைக்கப்பட்டுள்ள மணலுக்கு உரிய ரசீது என்னிடம் உள்ளது.

என்னிடம் சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. என்னிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் உள்ளது. அதன் மதிப்பு வெறும் ஐந்து லட்சம் ரூபாய் தான். அந்த கார் வாங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. 40 கோடி ரூபாய் எனக்கு தற்போது கடன் இருக்கிறது. சிறுவயதிலிருந்தே கார் வாங்குவது என்னுடைய பழக்கம். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது என்னுடைய தந்தை எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார்.

ஆடம்பரத்தை விரும்பாத நான் என்னுடைய வேட்புமனுவில் கூட எல்லா விவரங்களையும் குறிப்பிட்டுள்ளேன். உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், வேண்டுமென்றே என் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |