Categories
தேசிய செய்திகள்

“7 வது மாடியில் இருந்து அறுந்து விழுந்த லிப்ட்”… 8 தொழிலாளர்கள் பலி… பெரும் சோகம்…!!!!!!

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் கட்டப்பட்டு வருகின்ற கட்டுமானத்தின் லிப்ட் திடீரென அருந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கின்றனர் அதாவது குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்த கட்டிடம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் ஏற்றி சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து அறுந்து விழுந்ததில் எட்டு தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என மண்டலம் 1 ன் காவல் துணை ஆணையர் லவீனா சின்ஹா கூறியுள்ளார்.

Categories

Tech |