சென்னை அடுத்த ஆவடி பருத்திப்பட்டு சேர்ந்த யோகா மாஸ்டர் பாபு ரவி என்பவரின் 7 வயது மகன் தர்ஷித், ஓம்கார ஆசனத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்.சிறு வயது முதலே மிகவும் கடுமையான ஓம்கார ஆசனத்தில் தர்ஷித் பயிற்சி எடுத்து வந்த நிலையில் நேற்று பூந்தமல்லி அருகே தனியார் மண்டபத்தில் தலையில் கண்ணாடி டம்ளர் வைத்து சுமார் 6.14 நிமிடங்கள் ஓம்கார ஆசனத்தில் அமர்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு ஓம்கார ஆசனத்தில் இதுபோல 2.45 நிமிடங்கள் செய்ததே சாதனையாக இருந்தது. தர்ஷித் அந்த சாதனையை முறியடித்ததுடன் 3 மடங்கு நேரம் அதிகமாக செய்து அசத்தியுள்ளார். தர்ஷித்தின் இந்த சாதனையை யோகா மாஸ்டர்கள் மற்றும் உறவினர்கள் பாராட்டி வருகிறார்கள்.