Categories
தேனி மாவட்ட செய்திகள்

7 வயது மகனை தவிக்கவிட்ட தாய்…. 3 பேரை திருமணம் செய்த கொடூர சம்பவம்…. தேனியில் பெரும் பரபரப்பு….!!!

ஒரு பெண் 3 பேரை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே என்ஜினியராக வேலை பார்க்கும் விஜய் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு வித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் வித்யா குடும்பத்தை கவனிக்காமல் அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசியுள்ளார். இதனால் விஜய் போஸ் மனைவி வித்யாவை கண்டித்துள்ளார். இருப்பினும் வித்யா அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போனில் பேசியுள்ளார்.

இதுகுறித்து விஜய் போஸ் வித்யாவின் உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார். அப்போது வித்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதாக உறவினர் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜய் போஸ் வித்யாவிடம் முதல் திருமணம் குறித்து கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கடுமையான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக வித்யா மதுரையில் உள்ள அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வித்யாவுக்கு கடந்த மே மாதம் வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட விஜய் போஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வித்யாவிடம் சென்று நியாயம் கேட்டுள்ளார்.

அதற்கு வித்யாவின் குடும்பத்தினர் 3-வது திருமணம் குறித்து வெளியில் சொன்னால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்து விடுவதாகவும், கத்தியால் குத்தி கொலை செய்து செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் விஜய் போஸ் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வித்யா, அவருடைய தாய் சித்ரா மற்றும் தந்தை சுகுமாரன், சகோதரர்கள் முரளி மற்றும் சரண்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு பெண் 3 பேரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |