Categories
மாநில செய்திகள்

7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி தர வேண்டும் – எம்.பி. ஜெயக்குமார்…!!

7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு  அனுமதி அளிக்க வலியுறுத்தி தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீடு  மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடிப்பது கவலை அளிப்பதாக காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேசியவர் ஆளுநர் கால தாமதம் செய்வதற்கான காரணம் என்று கேள்வி எழுப்பினார். உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு அனுமதி தராமல் ஆளுநர் அதனை 45 நாட்களுக்கும் மேலாக கிடப்பில் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு  மசோதாவுக்கு அனுமதி தர கூறும் போராட்டத்தில் அதிமுக அரசுடன் இணைந்து பங்கேற்கத் தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். இதை அடுத்து தமிழக ஆளுநருக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

Categories

Tech |