Categories
உலக செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பின்…. கணவருடன் பள்ளி மாணவி மீட்பு…. தகவல் வெளியிட்ட மாகாண கவர்னர்….!!

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவி தனது கணவருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டில் உள்ள வடக்கு போர்னோவில் சிபோக் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் போகோஹரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பள்ளிக்கூடம் ஒன்றில் 270 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக சமூக வலைதளங்களில் உலகளவில் மக்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்கிடையில் நைஜீரிய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் கடந்த 2017ஆம் ஆண்டு 82 மாணவிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும் சிலர் அவர்களிடம் இருந்து தப்பி வந்தனர். இருப்பினும் பயங்கரவாதிகளிடம் 113 மாணவிகள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் பயங்கரவாதிகளால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக போர்னோ மாகாண கவர்னர் பாபகானா ஜுலம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவி பயங்கரவாதிகளின் சிறையில் இருந்தபோது திருமணம் செய்து கொண்ட தனது கணவருடன் சமீபத்தில் ராணுவத்தினரிடம் வந்து சேர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் பள்ளி மாணவியின் பெற்றோர் கூறிய அடையாளத்தை வைத்து அவர் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார். குறிப்பாக ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவி தனது குடும்பத்துடன் இணைந்ததால் மற்ற மாணவிகளையும் கண்டுபிடிக்கும் நம்பிக்கை வந்துள்ளதாக கவர்னர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |