Categories
அரசியல் மாநில செய்திகள்

7 ADMK எம்.எல்.ஏக்கள் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம் ..!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக  இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்,

மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும்,கழக தொண்டர்களையும்,

சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |