Categories
உலக செய்திகள்

“அசர்பைஜான்-அர்மீனிய நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதல்!”.. 8 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!!

அசர்பைஜான்-அர்மீனிய நாடுகளின் இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த மோதலில் 8 வீரர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசர்பைஜான் நாட்டிற்கும் அதன் பக்கத்து நாடான அர்மீனியாவிற்கும் இடையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் போர் ஏற்பட்டது. ஆறு வாரங்களாக தொடர்ந்து போர் நடந்திருக்கிறது. இதில் அர்மீனிய நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த, நாக்ரோனா-கராபாக் என்னும் மாகாணம்,  அசர்பைஜானின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

அந்த போரில் மொத்தமாக 6 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பலியானார்கள். அதன் பின்பு ரஷ்ய அரசு தலையிட்டு இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தது. எனினும், அடிக்கடி எல்லைப் பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், நாக்ரோனா-கராபாக்கின் எல்லைப்பகுதியில், நேற்று இரண்டு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையில் திடீரென்று ஏற்பட்ட மோதலில், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 வீரர்கள் பலியாகியுள்ளனர். அதில், 7 வீரர்கள் அசர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு வீரர் அர்மீனிய நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அர்மீனிய அரசு, தங்கள் நாட்டைச் சேர்ந்த 24 ராணுவ வீரர்கள் மாயமானதாகவும், அசர்பைஜான் நாட்டை சேர்ந்த 13 வீரர்களை பிடித்து வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

Categories

Tech |