Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மனநலம் பாதித்த பெண்…. ”7 சிறுவர்கள் கூட்டு பாலியல்” ஏர்வாடி_யில் கொடூரம் …!!

ஏர்வாடி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஏழு சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், தர்காவிற்கு நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் மனநல சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வாய்பேச முடியாத தன் தந்தையின் உதவியுடன் இங்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.அந்தப் பெண் ஏர்வாடி தர்காவின் அருகே உள்ள காட்டுப்பள்ளி என்ற பகுதியில் தங்கி மனநலம் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த இளம் பெண் நேற்று முன்தினம் நள்ளிரவில் இயற்கை உபாதைக்காக தந்தையின் உதவியுடன் சென்றபோது 14 முதல் 19 வரை வயது வரை உள்ள ஏழு சிறுவர்கள் அந்தப் பெண்ணை வழி மறித்து இழுத்துச் சென்று மறைவான இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டபெண்ணின் தந்தை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Image result for கூட்டு பாலியல்

அதனடிப்படையில் ஏழு சிறுவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் ஏர்வாடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஏழு சிறுவர்களும் கஞ்சா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூரம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |