Categories
தேசிய செய்திகள்

“7 கொரோனா தடுப்பூசிகள்”…. “மருத்துவ உலகில் முன்னேறும் இந்தியா”… சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!

இந்தியாவில் மேலும் 7 கொரோனா  தடுப்பூசிகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்,சீரம் நிறுவனமும்  தயாரித்த  கோவிஷீல்டு தடுப்பு மருந்தும், பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து தயாரித்த கோவாக்சினும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் இடையில் இரு தடுப்பூசிகளும் வெளிநாடுகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்து வருகிறது. இந்த வகையில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறுகையில்: “அண்மையில் பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் மட்டுமே இந்தியா சார்ந்து இருக்க போவது இல்லை. மேலும் தடுப்பூசிகளை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது .சந்தையில் தடுப்பூசி விற்பனைக்கு வரும்போது அதன் மீது எந்த கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மார்ச் மாதம் முதல் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |