தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100யை நெருங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் மிரட்டுள்ள ஒட்டுமொத்த நாடும் ஊரடங்கு அமல் படுத்தி அதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் நான்காவது ஊரடங்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் கொரோனாவின் பரவலும் பல்வேறு மாநிலங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது.
தினந்தோறும் எந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு செல்கின்றதோ அந்த அளவுக்கு உயிரிழந்தவர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகின்றது. ஆனாலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைந்த அளவாக இருக்கிறது. குறிப்பாக தமிழகம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனா இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி வருகிறது. இதை மத்திய சுகாதார அமைச்சகம் கூட தெரிவித்து தமிழகத்தை பாராட்டியது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று வெளியான தகவலில், தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 6282 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்7 பேர் மரணம் அடைந்ததால் பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது.