மத்திய பிரதேச மாநிலம் ஜபால்பூரில் இரண்டு மா மரங்களுக்கு 4 பேரை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், ஜபால்பூரில் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ற தம்பதிகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர்கள் சென்னையிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது ஒருவர் இரண்டு மா மரக்கன்றுகளை இவரிடம் விற்றுள்ளார். அதை இவர்கள் வாங்கி வந்து தோட்டத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளனர். மற்ற மரங்களைப் போல் மஞ்சள் நிறத்தில் பழங்களை தராமல், ரூபி ரெட் கலரில் இந்த பழங்கள் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கேட்க அவர்களுக்கும் இது குறித்து பெரிதாக தெரியவில்லை.
இறுதியாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது மியாஜாகி மாம்பழம் என தெரியவந்துள்ளது. இந்த மாம்பழம் மிகவும் அரிய வகை மாம்பழம். இதை அறிந்து அருகில் உள்ளவர்கள் அந்த மாம்பழங்களை திருடி சென்று விட்டனர். இதனால் அந்த தம்பதிகள் மாம்பழங்களை திரும்ப திருடாமல் இருப்பதற்காக 4 பேரை காவலுக்கு நிறுத்தி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் 6 நாய்களையும் காவலுக்கு வைத்துள்ளனர். தற்போது அந்த மரத்தில் 7 காய்கள் உள்ளது. பழமாகிய பின் அது விற்பனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு போடும் அளவிற்கு அந்த மாம்பலத்தில் என்ன விசேஷம் உள்ளது என்று கேட்டீர்கள் என்றால், உண்மையில் இந்த மாம்பழம் மியாஜாகி என்று அழைக்கப்படும் அரிய வகை மாம்பழம். ஜப்பானின் மியாஜாகி நகரத்தில் இந்த வகை மாம்பழங்கள் விளையும். வேறு எங்கும் கிடைக்காது. சூரியனின் முட்டை என அறியப்படும் இந்த வகை மாம்பழங்கள் ஒரு கிலோ 2.70 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு மாம்பழத்தின் விலை சுமார் 21,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாகவே அவர் இவ்வளவு பாதுகாப்பை போட்டு அந்த மாம்பழங்களை பாதுகாத்து வருகிறார்.