கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லையில் சட்டவிரோதமாக புகுந்ததாக கைதான இந்தியர்கள் ஏழு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் கனடாவின் எல்லையில் கடந்த வாரத்தில் 15 நபர்களுடன் ஒரு வேன் சென்றிருக்கிறது. எனவே, வேன் ஓட்டுனர் ஸ்டீவ் சாந்த் அமெரிக்க பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டார். அந்த வேனில் பயணித்த இரண்டு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஏற்கனவே, அங்கு சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எல்லையில் நடந்து சென்றதாக மேலும் இந்தியாவை சேர்ந்த ஐந்து நபர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தெரிவித்ததாவது, “நாங்கள் கனடா நாட்டில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்த போது, சிலர் எங்களை கடத்தி விட்டார்கள். சுமார் பதினோரு மணி நேரங்களாக அவர்கள் எங்களை நடக்க வைத்தனர் என்று கூறியிருக்கிறார்கள்.
மேலும், வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்காக பொம்மைகள், ஆடைகள் மற்றும் மருந்துகள் வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஏழு பேரையும் அதிகாரிகள் விடுவித்திருக்கிறார்கள்.