அமெரிக்க நாட்டில் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஏழு நபர்கள் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, அதனை தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இன்னிலையில் அந்நாட்டின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லேண்டா நகரத்தில் மக்கள் கூடியிருக்கும் இடத்தில் திடீரென்று ஒரு நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார்.
இதில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருக்கிறார்கள். துப்பாக்கிசூடு தாக்குதல் மேற்கொண்ட நபர் பற்றிய தகவல் எதுவும் தற்போது தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் இந்த வருடத்தில் அதிக அளவில் 381 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.