புவனேஸ்வர்: தப்தபானி காட் அருகே பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்ததில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள தப்தபானி காட் அருகே இன்று (ஜன 29) சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று பாலத்திலிருந்து சறுக்கி விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் இறந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர், உள்ளூர் மீட்புக்குழுக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.