திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு 7 லட்சம் வரை பணத்தை இழந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூர் வாஞ்சிபாளையம் இடையே ரயில் பாதையில் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பது தெரியவந்தது. அவர் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவர் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாக தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 4ஆம் தேதி 7 லட்சத்து 64 ஆயிரம் வரை இழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் திருப்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் ரம்மி விளையாட்டின் மூலம் தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்து கொண்டே வருகிறது.