கனடாவில் பண்ணை வீடு ஒன்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அலெக்ஸ் ஆர்ச்போல்டு என்ற நபர் பழங்கால பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு அந்தப் பொருட்களின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. இதற்காக மறைந்த இசை ஆசிரியர் பெட்-ஜோன் ரேக்கின் என்பவரின் பழங்கால பண்ணை வீட்டை ஏழு லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார்.
ஆனால் அவருக்கு இன்ப அதிர்ச்சி அந்த வீட்டில் இருந்தது. அந்த வீட்டில் பழைய அறையிலிருந்து பழங்கால நாணயங்கள், தங்க வைர மோதிரங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டது. இதன் மதிப்பு தோராயமாக இரண்டு கோடி இருக்கும் என்று அவர் கணக்கிட்டுள்ளார்.