7 மாத கர்ப்பிணி பெண் கொசு மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் ராணுவ வீரரான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மோனிகா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பின்னர் திருமூர்த்தி ஒரு மாத கால விடுப்பில் வீட்டிற்கு வந்த போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மன உளைச்சலில் இருந்த மோனிகா வீட்டில் வைத்திருந்த கொசு மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனையடுத்து மயக்க நிலையில் இருந்த மோனிகாவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோனிகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.