7 மாத கர்ப்பிணி மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கும் சுமதி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. அவர்கள் திருமணத்திற்கு பின்பு ஈரோடு மாவட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதனையடுத்து சுமதி 7 மாதம் கர்ப்பம் தரித்துள்ளார்.இந்நிலையில் இருவரும் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது சுமதிக்கு தீடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் முத்துசாமி உடனடியாக சுமதியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.
அதன்பின் அவர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு டாக்டர் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அந்தியூர் காவல்துறையினர் சுமதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.