Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை திறக்க கூடாது…. உரிமம் ரத்து…. ஆட்சியரின் உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல் காரணத்தினால் ஏழு நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 12-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தலில் பதிவாகியிருக்கின்றன வாக்குகள் எண்ணிக்கை நடைபெற இருக்கின்றது. இதனால் இம்மாவட்டத்தில் வருகின்ற 4-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை ஆறு நாட்களும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடக்கும் 12-ஆம் தேதி ஒரு நாளும் என மொத்தமாக ஏழு நாட்கள் மது விற்பனை இல்லாத தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து இம்மாவட்டத்தில் இருக்கும் அரசு மது கடைகள் இந்த ஏழு நாட்கள் முழுவதுமாக இயங்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் தடைவிதிக்கப்பட்ட 7 நாட்களில் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதனை போல் மது கூடங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் மற்றும் விற்பனை செய்வதாக தெரிய வந்தாலும் மது கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் மட்டுமின்றி உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |