- தமிழகத்தில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க இருப்பதாக கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் புதிதாக 7 அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த சுற்றறிக்கையின் படி, ஏழு புதிய கல்லூரிகளானது, கோவை, கரூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், விருதுநகர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 7 மாவட்டங்களில் தொடங்கப்பட இருக்கின்றன.
இத்தகைய புதிய கல்லூரிகளுக்கு தேவையான அரசு கட்டிடத்தை தேர்வு செய்து தற்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையை நடத்தவும், அவ்வாறு அரசு கட்டடங்கள் இல்லை என்ற பட்சத்தில், அதற்கு பொருத்தமான தனியார் கட்டிடங்களை பார்த்து தேர்வு செய்து அந்த கட்டிடத்தில் அரசு கல்லூரி இயங்கவும், தேவையான நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.