வெனிசுலாவில் முதல் தடவையாக ஏழு நபர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் பரவல், ஒரு மாதத்தில் சுமார் 106 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இந்நிலையில், வெனிசுலாவில் முதல் தடவையாக ஏழு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ தெரிவித்துள்ளதாவது, முதன்முறையாக ஏழு நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதனை தவிர்க்க இயலாது. ஒமிக்ரான் பாதிப்பு, நம் நாட்டிலும் நுழைந்துவிட்டது. தடுப்பூசி செலுத்துவது மட்டும் தான் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்று கூறியிருக்கிறார். ஸ்பெயின், பனாமா மற்றும் டொமினிக்கன் குடியரசிலிருந்து வந்த நபர்களுக்கு தான் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.