எகிப்தில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில், கடந்த 2019-ஆம் வருடத்தில், செங்கடல் வழியாக 2 டன் எடை உடைய ஹெராயின் போதைப்பொருளை சிலர் கடத்தியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 1167 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், எகிப்து நீதிமன்றம் பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், எகிப்தை சேர்ந்த இருவர் மற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு நபருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம், போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, எகிப்தில் மரணதண்டனை விதிக்கப்படுவது சட்டபூர்வமாக்கப்பட்டுவிட்டது.
மேலும், நாட்டில் கடந்த 2014ம் வருடத்தில் 44 நபர்களுக்கும், 2017 ஆம் வருடத்தில் 35 நபர்களுக்கும், 2018 ஆம் வருடத்தில் 43 நபர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.