Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை… திருமாவளவன் வலியுறுத்தல்…!!!

7 பேர் விடுதலையில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரம் உள்ளது என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

ஏழு பேர் விடுதலை செய்வதில் தமிழக அரசுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று திருமாவளவன் எம் பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் விரைந்து முடிவு எடுக்குமாறு தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் காட்டி இருக்கும் அக்கறையை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் மாநில அதிகாரத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த விடுதலையை சாத்தியப்படுத்துவற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என்றும், இதற்கான தீர்மானத்தை இயற்றிய ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை அவர்கள் ஏழு பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |