புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் முதல் முதலாக டெல்லியில் இருந்து திரும்பிய மாஹே பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடந்து அப்பகுதியை சேர்ந்த காவலர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57ஆக உள்ளது. மாநிலத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் 33 பேராக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 7 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 90ஆக உயர்ந்துள்ளது. தற்போது காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு தளர்வால் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், மக்கள் இன்னும் அதிகவிழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் மூலமாகவும் அங்கு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் நபர்களை தடுக்க புதுவை போலீசார் வாகன தணிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு எண் கொண்ட வாகனங்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவ பணி தொடர்பாக செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.