Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் சிக்கிய 7 பேர்….! கோயம்பேடு மார்க்கெட் மூலம் 88 பேருக்கு கொரோனா …!!

கோயம்பேடு மார்க்கெட் மூலமாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பிறவியுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையோடு தொடர்புடையவர்கள் என 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது . இதில் புதிதாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 50 பேர், அரியலூரில் 19 பேர், கடலூரில் 9 பேர், விழுப்புரத்தில் 2 பேர், பெரம்பலூரில் 1 காஞ்சிபுரத்தில் 7 என மொத்தமாக கோயம்பேடு சந்தை தொடர்புடைய 88 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே இருக்கக்கூடிய பகுதியில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சம்பந்தப்பட்ட 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் ரத்த மாதிரி எடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |