Categories
உலக செய்திகள்

இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்…. தரைமட்டமான கட்டிடம்…. 7 பேர் பலி…. தகவலை வெளியிட்டுள்ளனர் பாலஸ்தீன அதிகாரிகள்….!!

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இதில் 5 மாதம் பச்சிளம் குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த குழந்தை கட்டிட இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்த தாயின் சடலத்திற்கு அருகில் உயிருடன் இருந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலை படுகொலை என ஹமாஸ் போராளி குழுவின் உறுப்பினரும் காசாவின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறிவைத்து ராக்கெட்டு தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் குழுவின் ஆயுதமேந்திய படை தெரிவித்துள்ளது.

Categories

Tech |